மதுரையில் தொடங்கிய மர்மம்… உலக அரங்கில் உச்சம் தொட்ட ‘வதந்தி 2’!
மதுரையில் தொடங்கிய மர்மம்… உலக அரங்கில் உச்சம் தொட்ட ‘வதந்தி 2’!
பிரைம் வீடியோ உலகளாவிய தரவரிசையில் ஆங்கிலம் அல்லாத தொடர்களில் 2-ம் இடம் – Scripted பிரிவில் முதலிடம்
மதுரையின் மண் வாசனையோடு தொடங்கிய ஒரு மர்மக் கதை, தற்போது சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எம். சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணையத் தொடருக்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பிரைம் வீடியோவில் வெளியாகி இரண்டு வாரங்களுக்குள், உலகின் ஆங்கிலம் அல்லாத இணையத் தொடர்களில் 2-ம் இடத்தையும், Scripted பிரிவில் 1-ம் இடத்தையும் இந்தத் தொடர் பிடித்துள்ளது.
ஆகஸ்ட் 7-ம் தேதி உலகளவில் வெளியான ‘வதந்தி 2’, முதல் பாகத்தின் கதையைத் தொடராமல், அதே தொடரின் மையக் கருவான ‘வதந்திக்கும் உண்மைக்கும் இடையிலான முரண்’ என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு முற்றிலும் புதிய கதைக்களத்துடன் உருவாகிய...

