Tuesday, November 17
Shadow

மதுரையில் தொடங்கிய மர்மம்… உலக அரங்கில் உச்சம் தொட்ட ‘வதந்தி 2’!

மதுரையில் தொடங்கிய மர்மம்… உலக அரங்கில் உச்சம் தொட்ட ‘வதந்தி 2’!

பிரைம் வீடியோ உலகளாவிய தரவரிசையில் ஆங்கிலம் அல்லாத தொடர்களில் 2-ம் இடம் – Scripted பிரிவில் முதலிடம்

மதுரையின் மண் வாசனையோடு தொடங்கிய ஒரு மர்மக் கதை, தற்போது சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எம். சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணையத் தொடருக்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பிரைம் வீடியோவில் வெளியாகி இரண்டு வாரங்களுக்குள், உலகின் ஆங்கிலம் அல்லாத இணையத் தொடர்களில் 2-ம் இடத்தையும், Scripted பிரிவில் 1-ம் இடத்தையும் இந்தத் தொடர் பிடித்துள்ளது.

ஆகஸ்ட் 7-ம் தேதி உலகளவில் வெளியான ‘வதந்தி 2’, முதல் பாகத்தின் கதையைத் தொடராமல், அதே தொடரின் மையக் கருவான ‘வதந்திக்கும் உண்மைக்கும் இடையிலான முரண்’ என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு முற்றிலும் புதிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.

முதல் பாகமான ‘வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ சஸ்பென்ஸ் மற்றும் கிரைம் த்ரில்லர் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் புதிய கதாபாத்திரங்கள், புதிய வழக்கு, புதிய களத்துடன் அந்த எதிர்பார்ப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

இந்த முறை கதையின் களம் மதுரை. மதுரையின் பாரம்பரியம், அரசியல் சூழல், காவல்துறை விசாரணை மற்றும் ஜல்லிக்கட்டு திருவிழாவின் பரபரப்பு ஆகியவை கதையின் பின்னணியாக அமைந்துள்ளன. இதனால், வழக்கமான கிரைம் த்ரில்லர் கதையைத் தாண்டி, அந்தப் பகுதியின் வாழ்வியலையும் கதைக்குள் இயல்பாக இணைக்கிறது இந்தத் தொடர்.

தொடரில் எஸ்.ஐ. மூசா ராசா என்ற நேர்மையான காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியுடன் செயல்படும் மூசா ராசாவின் விசாரணை, அரசியல் தலையீடு, ஊடக பரபரப்பு, தனிமனித பலவீனங்கள் என பல்வேறு தடைகளை எதிர்கொள்கிறது.

நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளின் தொடக்க நிகழ்வின்போது மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்படுவதிலிருந்து கதை வேகம் பெறுகிறது. அந்த எலும்புக்கூட்டின் பின்னணி குறித்து நடைபெறும் விசாரணை எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க, அதன் தடங்கள் ‘மணி’ என்ற மர்மமான கைதியை நோக்கிச் செல்கின்றன. அதன் பிறகு விரியும் சம்பவங்களே தொடரின் பிரதான மர்மமாக மாறுகின்றன.

சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த எட்டு அத்தியாயங்கள் கொண்ட தொடரை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி ஆகியோர் கிரியேட்டிவ் புரொடியூசர்களாக தயாரித்துள்ளனர்.

தமிழில் உருவான இந்தத் தொடர், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன் வெளியாகியுள்ளது. இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இது பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.

உலகின் பல்வேறு மொழிகளில் வெளியாகும் முன்னணி தொடர்களுக்கு மத்தியில், தமிழ் மொழியில் உருவான ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ பெற்றுள்ள இந்த சர்வதேச வரவேற்பு, தமிழ் வெப் சீரிஸ்களுக்கு உலகளவில் உருவாகி வரும் வரவேற்பை மீண்டும் நிரூபித்துள்ளது.

மதுரையின் பின்னணியில் தொடங்கிய ஒரு மர்மம்… இன்று உலக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதே ‘வதந்தி 2’ பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றி.

From Madurai to the World: ‘Vadhandhi: The Mystery of Mani’ Rises to No. 2 Among Non-English Series Worldwide on Prime Video

M. Sasikumar-starrer also tops the global Scripted category, marking a major milestone for Tamil original content

A mystery that began in the heart of Madurai has now captured the attention of audiences across the globe. M. Sasikumar-starrer ‘Vadhandhi: The Mystery of Mani’ has achieved a major international milestone on Prime Video, ranking No. 2 among Non-English series worldwide and securing the No. 1 position globally in the Scripted category within two weeks of its August 7 premiere.

The second season of the Tamil original suspense thriller has taken the franchise in an entirely new direction, introducing a fresh mystery, new characters and a new setting while retaining the central theme that defines the ‘Vadhandhi’ franchise — the conflict between rumour and truth.

The first season, ‘Vadhandhi: The Fable of Velonie’, established a strong identity in the suspense and crime thriller space. Season 2 builds on that legacy with a completely new case, a new ensemble led by M. Sasikumar, and the layered, character-driven storytelling that has become a defining feature of the series.

This time, the story unfolds against the culturally rich backdrop of Madurai, bringing together the region’s traditions, political atmosphere, police investigation and the vibrant energy of the iconic Jallikattu festival. The setting becomes an integral part of the narrative, adding a distinctive local flavour to the gripping mystery.

Sasikumar plays SI Moosa Raza, an honest and determined police officer who is relentless in his pursuit of the truth. His investigation soon puts him up against political pressure, media frenzy and the vulnerabilities of the people involved in the case.

The mystery begins to unfold when human skeletal remains are discovered during the inauguration of a highway project. What initially appears to be a straightforward investigation soon takes unexpected turns, eventually leading Moosa Raza towards an elusive prisoner named Mani.

The eight-episode series also features Yashwanth, Anagha Maruthora, Aparna Das, Vivek Prasanna, Revathy Sharma and Arjun Nandhakumar in pivotal roles.

Created, written and directed by Andrew Louis, the series is produced under the banner of Wallwatcher Films, with Pushkar and Gayatri serving as Creative Producers.

Originally made in Tamil, the series is also available with dubs in Telugu and Hindi, along with subtitles in 15 additional languages. It has reached audiences across India and more than 240 countries and territories worldwide.

The global response to ‘Vadhandhi: The Mystery of Mani’ marks another significant achievement for Tamil original content, placing a series rooted in the cultural landscape of Madurai alongside leading international titles on Prime Video.

From a mystery rooted in Madurai to a series making waves on the global streaming charts, ‘Vadhandhi: The Mystery of Mani’ has emerged as a strong example of how locally rooted Tamil stories can connect with audiences worldwide.