வனமகன் – திரை விமர்சனம் (கௌரவமகன்) Rank 4/5
இந்தியாவில் தலை சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெரும் ஒரு இயக்குனர் என்றால் அது இயக்குனர் A.L.விஜய்யும் உண்டு என்று மிகவும் ஆணித்தரமாக சொல்லலாம் காரணம் அவரின் படைப்பு மிக நேர்த்தியாகவும் நேர்மையாகும் இருக்கும் நம்பிக்கையுடன் பெண்கள் குழந்தைகள் குடும்பங்களுடன் பார்க்கக்கூடியதாக தான் இருக்கும் அந்த வகையில் மிக நேர்த்தியான ஒரு படைப்பு என்று வனமகன் படத்தை சொலலாம்.
இந்த படத்தில் காதல் அன்பு பாசம் துரோகம் யாரிடம் உண்மையான காதல் இருக்கும் யாரிடம் உண்மையான பாசம் இருக்கும் என்ற பாசபோரட்டம் தான் இந்த வனமகன். ஒரு கதையை எழுதும் போதே இந்த படம் யாரைகுறிக்கும் யாருக்கான கதை எப்படி பட்ட கதை என்று நினைத்து தான் எழுதுகிறார்கள். அதே போல இதில் யார் நடித்தால் இந்த கதைக்கு உயிர் கிடைக்கும் என்றும் ஒரு கலைஞன்க்கு தெரியும் அதையும் மிக நேர்த்தியாக செய்துள்ளார் இயக்குனர் என்று தான் சொல்லணும்.
ஒரு கதாநாயக...
