Monday, December 9
Shadow

வனமகன் – திரை விமர்சனம் (கௌரவமகன்) Rank 4/5

இந்தியாவில் தலை சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெரும் ஒரு இயக்குனர் என்றால் அது இயக்குனர் A.L.விஜய்யும் உண்டு என்று மிகவும் ஆணித்தரமாக சொல்லலாம் காரணம் அவரின் படைப்பு மிக நேர்த்தியாகவும் நேர்மையாகும் இருக்கும் நம்பிக்கையுடன் பெண்கள் குழந்தைகள் குடும்பங்களுடன் பார்க்கக்கூடியதாக தான் இருக்கும் அந்த வகையில் மிக நேர்த்தியான ஒரு படைப்பு என்று வனமகன் படத்தை சொலலாம்.

இந்த படத்தில் காதல் அன்பு பாசம் துரோகம் யாரிடம் உண்மையான காதல் இருக்கும் யாரிடம் உண்மையான பாசம் இருக்கும் என்ற பாசபோரட்டம் தான் இந்த வனமகன். ஒரு கதையை எழுதும் போதே இந்த படம் யாரைகுறிக்கும் யாருக்கான கதை எப்படி பட்ட கதை என்று நினைத்து தான் எழுதுகிறார்கள். அதே போல இதில் யார் நடித்தால் இந்த கதைக்கு உயிர் கிடைக்கும் என்றும் ஒரு கலைஞன்க்கு தெரியும் அதையும் மிக நேர்த்தியாக செய்துள்ளார் இயக்குனர் என்று தான் சொல்லணும்.

ஒரு கதாநாயகனை படம் முழுக்க பேசவிடாமல் நடிக்க வைத்து வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை அதற்க்கு தன நம்பிக்கையும் தன கதையின் மேல் நம்பிக்கையும் இருக்கணும் அதையும் மிக சிறப்பாக செயல் பட்டு இருக்கிறார் இயக்குனர் என்று தான் சொல்லணும் அதே போல நடிக்கும் நடிகரும் அந்த இயக்குனர் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் அந்த நம்பிக்கையும் மிக பெரியவெற்றி பெற்றுள்ளது என்று தான் சொல்லணும்

தமிழ் சினிமா ரசிகர்கள் நாலு பாட்டு ஐந்து சண்டை மூணு ஆடைவிலகிய காட்சி இப்படி இருந்தால் தான் படம் பார்க்க வருவார்கள் என்பதை எல்லாம் விட்டு விட்டு நல்ல கதைக்கு மட்டும் தான் செலவு செய்து படத்திற்கு வருவோம் என்பதில் மிகவும் தெளிவாக இருகிறார்கள். என்பதை புரிந்து படம் எடுத்து இருக்கும் இயக்குனர் விஜய்யை கண்டிப்பாக பாராட்டனும். சரி வாங்க யார் நடித்து இருகிறார்கள் என்ன கதை என்று பார்ப்போம்.

காட்டுவாசியாக ஜெயம்ரவி, கோடிகளில் புரளும் சாய்யிஷா அவரின் சமையல்காராக தம்பி ராமையா வளர்ப்பு தந்தையாக பிரகாஷ்ராஜ் நேர்மையான வன அதிகாரியாக சண்முகராஜன் வில்லன் வன அதிகாரியாக சாம் பால் ஒரு காட்சிக்கு வரும் ரம்யா ஜெயம் ரவியின் அப்பாவாக வேலா ராமமூர்த்தி வில்லனாக பிரகாஷ்ராஜ் மகனாக வருண் மற்றும் பலர் நடிப்பில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ்
இந்த படத்தின் முக்கிய பங்கு சண்டை பயிற்சியாளர் சில்வா A.L. விஜய்யின் மிக நேர்த்தியான இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் வனமகன்

பணமா பாசமா இயற்கையில் வளம் மனித நேயம இவற்றை மையாமாக பின்னப்பட்ட கதை தான் வனமகன் நாம் தமிழ் சினிமாவில் எத்தனயோ படன் மலை வாழ் மக்களை பற்றி பார்த்துவிட்டோம் அதையெல்லாம் மீறின ஒரு எதார்த்தமான உண்மையான கதை

படத்தின் முக்கிய வெற்றிக்கு வழி வகுத்தவர்கள் என்றல் அது கதை இயக்குனர் நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் என்று நாம் அனைவரையும் சொல்லலாம் அந்த அளவுக்கு எல்லோரும் மிக நேர்த்தியாக தன பங்கை நிறைவாக செய்துள்ளனர்.

ஜெயம் மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகன் என்று நிருபித்துவிட்டார். கமல்ஹாசனுக்கு பிறகு வசனம் இல்லாமல் ஒரு நடிகனால் முடியும் என்று நிருபித்துவிட்டார். தன முகத்தின் மற்றும் உடல் பாவத்திலே வசனம் பேசி வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் சொல்லணும் அந்த அளவுக்கு மிக சிறந்த நடிப்பு நிச்சயம் இந்த படத்தி ஜெயம் ரவிக்கு தேசிய விறு உண்டு என்று சொல்லும் அளவுக்கு ஒரு நடிப்பு அதற்கு இயக்குனரின் காட்சியமைப்பு அதைவிட சிறப்பு ஜெயம்ரவியின் நடிகன் என்ற பாதையில் மிக பெரிய மைல் கல்லாக அமையும் இந்த படம்

புதுமுக நாயகி சாயியிஷா இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணாவின் பேத்தி என்பதை தன முதல் படத்திலே நிருபித்துவிட்டார். நீண்ட நாளுக்கு பின் தமிழில் ஒரு மிக சிறந்த நடிகை என்று சொல்லணும் நிச்சயம் நடிகை சிம்ரன் இடத்துக்கு தகுதியானவர் என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு நடிப்பிலும் சரி அதைவிட நடனத்தில் அடேங்கப்பா என்று பிரமிக்கும் அளவுக்கு ஒரு நடிப்பு என்று தான் சொல்லணும்.

படத்தின் மிக பெரிய பலம் படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்று சொல்லணும் அருமையான ஒளிப்பதிவு காட்சிக்கு காட்சி பசுமை நிறைந்த ஒளிப்பதிவு அதேபோல திரைக்கதைக்கு ஏற்ப பின்னணி இசை சபாஷ் போடும் பாடல்கள்

மற்றபடி படத்தில் நடித்த அனைவரும் தன பங்கை உணர்ந்து நடித்துள்ளார் குறிப்பாக பிரகாஷ்ராஜ், வளரும் நடிகர் வருண் சண்முகராஜ் சாம் பால் தலைவாசல் விஜய் தம்பிராமையா காமெடி இப்படி எல்லோரும் விஜயுடன் கைகோர்த்து உள்ளனர்

சண்டைபயிற்சியாளர் சில்வா வின் சண்டை காட்சிகள் பிரமிக்க வைக்கிறது பாவம் ஜெயம்ரவியை மாவு பிசைவது போல பிசைந்து எடுத்துள்ளார் ஜெயம் ரவியின் உழைப்பு படத்தில் காட்சிக்கு காட்சி தெரிகிறது.

மொத்தத்தில் வனமகன் நம் கௌரவமகன் Rank 4/5

Leave a Reply