தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழுவில் விஷால் – சேரன் அணிக்கு இடையே சலசலப்பு
தயாரிப்பாளர் சங்கத்துக்கு இந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக விஷால் பொறுப்பேற்ற பிறகு தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இதில் கந்துவட்டி பிரச்சனை, தயாரிப்பாளர்கள் சங்க வைப்பு நிதி, கேபிள் டி.வி, சேட்டிலைட் உரிமங்கள், டிஜிட்டல் சினிமா, கட்டண குறைப்பு, ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த நிர்வாகத்தின் பொது கணக்கு தாக்கல் நிறைவு பெறவில்லை. எனவே கடந்த நிர்வாகத்தில் இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விஷால் - சேரன் அணிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், சேரன் உள்ளிட்ட அவரது அணியில் இருக்கும் தயாரிப்பாளர்கள் பொதுக்குழுவில் பங்கே...