பாலு மகேந்திராவின் உதவியாளர் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம் ‘ ஜூலை 28 -ல் வெளிவருகிறது.
ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் வி .ஹரிஹரன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள படம் ' புயலாய் கிளம்பி வர்றோம் '.
இது மதுரை மண் சார்ந்த கதை.
படித்து விட்டு தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் கோழைகள் அல்ல .அவர்களைச் சீண்டி விட்டால் தாங்க முடியாது என்று சொல்கிற கதை .
நாயகனாக தமன் , நாயகியாக மதுஸ்ரீ நடித்துள்ளனர். தவிர இயக்குநர் ஆர்.என்.ஆர். மனோகர் , சிங்கம்புலி , திருமுருகன் , அழகன் தமிழ்மணி , ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ள ஜி.ஆறுமுகம் பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். சில குறும்படங்கள் இயக்கிய அனுபவமும் கொண்டவர்.
இயக்குநரிடம் படம் பற்றிக் கேட்ட போது ,
" இது படித்த இளைஞர்களின் கோபத்தின் முன் எப்படிப் பட்ட பலசாலியும் வீழ்ந்து விடுவான் என்று சொல்கிற கதை.
இது மதுரைப் பகுதியில் நடக்கும் கதை என்றால...
