PV999 படம் ஸ்ரீரெட்டியின் கதையா ? பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் PV999 படம் !
பொதுவாக பெண்கள் பிரச்சினையை அணுகுவதாகக் கூறும் படங்கள் வணிக நோக்கில் பெண்களைக் கவர்ச்சியாகக் காட்டுவார்கள். ஆனால் நாட்டில் பற்றி எரியும் பாலியல் கொடுமை பற்றியும் தொழில்நுட்ப வளர்ச்சியால் நிகழும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறித்தும் பேசும் ஒரு படம் கண்ணியமாக துளியும் ஆபாசக் கலப்பின்றி உருவாகியுள்ளது.
அப்படம் 'பென் விலை வெறும் ரூபாய் 999'. சுருக்கமாக 'PV999 '.
இப்படத்தை அறிமுக இயக்குநர் வரதராஜ் இயக்கியுள்ளார். இவர் அடிப்படையில் ஒரு எடிட்டர் .விளம்பரப் படங்கள் ஆவணப்படங்கள் என்று பணியாற்றியவர். ஒளிப்பதிவு சதீஷ்குமார் - மோகன் , இசை ஜூடோ சாண்டி , கலை ஜனார்த்தனம் , நடனம் அர்ச்சனா , வசந்த் குமார்.
"சமூகத்தில் ஆணுக்கு நிகரான பங்கு பெண்களுக்கு உண்டு. ஆனால் பெண்களை ஒருபோகப் பொருளாகேவே சமுதாயம் பார்க்கிறது. ஆண்களிடம் பெண்கள் பற்றிய பார்வை மாறியுள்ளது . அவர்கைளைச் சக மனுஷியாக நின...