ஹிந்திக்கு போகும் பிக் பாஸ் ரைசா நடிக்கும் “பியார் பிரேமா காதல்”
ஒரே வார்த்தைக்கு மூன்று வெவ்வேறு மொழிகளில் அர்த்தம் கற்பிக்கும் தலைப்பு கொண்ட ஒரு படம் , மொழி பிராந்தியங்களை தாண்டி செல்வது இயற்கைதான்.
"பியார் பிரேமா காதல்" என்ற இளைஞர்களை சுண்டி இழுக்கும் தலைப்பில் துரிதமாக தயாராகி வரும் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்க , இளம் இயக்குனர் இலன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கே productions ராஜ ராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ள இந்தப் படத்தின் மாற்று மொழி உரிமையை வாங்க பெரும் போட்டா போட்டி நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தின் ஹிந்தி உரிமைக்காக தயாராகி கொண்டு இருப்பதாக கூறப் படுகிறது.
' காதலுக்கு மொழி அவசியமில்லை. காதலை பற்றிய படங்களுக்கும் மொழி அவசியமில்லை. " High on Love" என்று துவங்கும் ஒரு பாடல் ஏற்கனவே வெளிவந்து சமூக வலைதளங்களில் பெரும் ஹிட் ஆனதின...
