
வரலாற்றுப் பின்னணியில் ராதிகா நடிக்கும் சந்திரகுமாரி தொடர்
ஹீரோயினாக அறிமுகமாகி, இன்றைக்கு அம்மா கதாபாத்திரம் உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் ராதிகா. பெரிய திரையில் அவருக்கெனத் தனியிடம் இருப்பது போல், சின்னத்திரையிலும் அசைக்க முடியாத ஒரு இடத்தைப் பல வருடங்களாகப் பிடித்து வைத்திருக்கிறார் ராதிகா.
அது, சீரியல். அவர் தயாரித்த, நடித்த சீரியல்கள் பல செம ஹிட்டாகியுள்ளன. தற்போது அவர் ‘வாணி ராணி’ சீரியலில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலில், அக்கா - தங்கை என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் ராதிகா. சில வருடங்களாக ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியல், விரைவில் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. எனவே, அடுத்த சீரியலில் கவனம் செலுத்தித் தொடங்கிவிட்டார் ராதிகா
இந்த சீரியலுக்கு ‘சந்திரகுமாரி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இந்த சீரியலை, ராதிகாவின் ராடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயார...