ராகவா லாரன்ஸின் ” தாய் ” அன்னையர் தின சிறப்பு பாடல் வெளியீட்டு விழா
பேய் படங்களை எடுத்து கோடி கோடியாக சம்பாத்தியம் செய்யும் ராகவா லாரன்ஸ் ஆனால் மன அளவில் தெய்வம் போல பல ஏழைகளுக்கு உதவி செய்பவர் பல ஏழை குழந்தைகளுக்கு படிப்பு மருத்துவம் என்று கணக்கு வழக்கு பார்க்காமல் செலவு செய்பர் அதோடு சமூக அக்கறை கொண்டவரும்.இவரின் அடுத்த முயற்சியும்
பெருமைக்குரியது.நடிகர் ராகவா லாரன்ஸ், தனது லாரன்ஸ் டிரஸ்ட் மூலம் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி ஏழைகளுக்கும் மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். இவர் சென்னையில் தனது அம்மாவுக்கு சிலை வடித்து கோயில்கட்டி அதற்கு வழிபாடும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அன்னையர் தினமான இன்று முதல் தாய் என்ற பெயரில் ஒரு விழிப்புணர்வு சேவை மையத்தை தொடங்கியிருக்கிறார் லாரன்ஸ். முதியோர் இல்லங்களில் தவிக்கும் பெற்றோர்களை மீட்கும் விதமாக தமிழகமெங்கிலும் அவர் விழிப்பு ணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளார். அதற்காக ஒரு பாடலை உருவாக்கியுள்ள அவர் அ...