Saturday, November 7
Shadow

Tag: Raja Karuppusamy

“கவுண்டமணி சாயலில் காமெடி… வில்லத்தனத்திலும் ஒரு ரசனை!” – நடிகர் அப்துல் லீ

“கவுண்டமணி சாயலில் காமெடி… வில்லத்தனத்திலும் ஒரு ரசனை!” – நடிகர் அப்துல் லீ

Latest News, Top Highlights
“கவுண்டமணி சாயலில் காமெடி… வில்லத்தனத்திலும் ஒரு ரசனை!” – நடிகர் அப்துல் லீ சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசையுடன் பயணத்தைத் தொடங்கியவர் நடிகர் அப்துல் லீ. யூடியூப் ஸ்கெட்ச் வீடியோக்களில் தொடங்கிய இவரது நடிப்பு பயணம், தற்போது வெள்ளித்திரை மற்றும் இணையத்தொடர்கள் என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அப்துல் லீ, தன்னுடைய நடிப்புக்கு முக்கிய உந்துசக்தியாக இருப்பவர்கள் நடிகர்கள் கவுண்டமணி மற்றும் பாலையா என்கிறார். குறிப்பாக, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தபோதும் அதற்குள் இருக்கும் எதிர்மறை தன்மையை வெளிப்படுத்தி, ரசிகர்களை ஒரே நேரத்தில் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்த அவர்களது பாணி தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறுகிறார். அப்துல் லீ என்ற பெயரில் இருக்கும் ‘லீ’ கூட அவருடைய திரைப்பயணத்தி...
மொதராத்திரி – திரை விமர்சனம்Rank  (3.5 / 5)

மொதராத்திரி – திரை விமர்சனம்Rank (3.5 / 5)

Latest News, Review
மொதராத்திரி – திரை விமர்சனம்: ஒரே இரவில் நடக்கும் கலகலப்பான காதல், குடும்பக் கதை! நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் மண் மணம் மாறாத கிராமத்து வாழ்வியலையும், காதல், திருமணம், குடும்ப உறவுகள், சாதி போன்ற சமூகப் பிரச்சனைகளையும் நகைச்சுவையோடும் உணர்வுகளோடும் கலந்து சொல்லும் ஒரு சுவாரஸ்யமான படைப்பாக வெளியாகியிருக்கிறது ‘மொதராத்திரி’. இயக்குநர் ராஜா கருப்புசாமி, ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, பார்வையாளர்களை அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் திரைக்கதைக்குள் பயணிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, கிராமத்து மனிதர்களின் இயல்பான பேச்சு, அவர்களது மனநிலை, குடும்பத்துக்குள் இருக்கும் சின்னச் சின்ன மோதல்கள் என அனைத்தையும் செயற்கைத்தனம் இல்லாமல் திரையில் கொண்டு வந்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். கதைக்குள் ஒரு கல்யாணக் குழப்பம்! தென் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டி...