பழம்பெரும் நடிகை ராஜசுலோசனா பிறந்த தினம் இவரைப்பற்றிய சில வரிகள்
பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை. 275-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ராஜசுலோசனா 1935 ஆம் ஆண்டில் சித்தூரில் பிறந்தார். திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான சி.எஸ்.ராவ் என்பவரை மணந்தார். 17 வயதில் நடிக்க வந்த இவர் 1953-ல் குணசாகரி என்ற கன்னடப் படத்தில் அறிமுகமாகி தமிழில் சத்யசோதனை படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பெண்ணரசி, ரங்கூன் ராதா, அம்பிகாபதி, உள்பட சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும், குணசித்திர, வில்லி வேடங்களிலும் நடித்திருக்கிறார். அரசிளங்குமரி, படித்தால் மட்டும் போதுமா, வணங்காமுடி போன்றவை இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்த திரைப்படங்கள் ஆகும். கடைசியாக எங்க வீட்டு வேலன் திரைப்படத்தில் நடித்தார்.
25 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தார். அமெரிக்காவில் இருந்தபோது நடன பள்ளி...
