“ராஜாவுக்கு செக்’ வைக்க சேரன் தான் தேவைப்பட்டார்” ; இயக்குநர் சாய் ராஜ்குமார்
இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என சுறுசுறுவென தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.
இதில் ராஜாவுக்கு செக் படம் எமோஷனல் திரில்லராக புதுவிதமான சேரனை நமக்கு காட்டும் படமாகத் தயாராகியுள்ளது
இந்த படத்தை இயக்கியுள்ளார் சாய் ராஜ்குமார். பெயர் புதிதுபோல்தோன்றினாலும், ஏற்கனவே ’ஜெயம்’ ரவியை வைத்து தமிழில் ’மழை’என்கிற படத்தை இயக்கிய அதே ராஜ்குமார் தான் இவர்.
கொஞ்ச காலம் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுவிட்டு தற்போது சாய் ராஜ்குமார் ஆக மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இந்த படம் குறித்த சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் சாய் ராஜ்குமார்.
“ ‘ராஜாவுக்கு செக்’ படத்தின் கதையை உருவாக்கி முடித்ததுமே இதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்க...
