சந்தானம் படத்தை கைவிட்ட விஜய் பட நிறுவனம்
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார் சந்தானம். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சக்க போடு போடு ராஜா படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், ‘சர்வர் சுந்தரம்’ படம் அடுத்ததாக ரிலீசாக இருக்கிறது.
சந்தானம் தற்போது 'ஓடி ஓடி உழைக்கணும்', 'மன்னவன் வந்தானடி', தில்லுக்கு துட்டு-2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அதேநேரத்தில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ராஜேஷ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்த சந்தானம், தற்போது கதாநாயகனாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய படத்தை விஜய் நடித்த மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. சில காரணங்களால் சந்தானம் படத்தை தயாரிக்க இருந்த முடிவை அந்த நிறுவனம் கைவிட்டிருப்பதாக கூறப்படுகிற...