காலம் வந்தால் எல்லாம் தானாக மாறும்: ரஜினிகாந்த்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் 4-வது நாளாக அவரது ரசிகர்களுடன் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இன்று ரசிகர்கள் முன்பு ரஜினி பேசும் போது,
இன்று 4-வது நாள். இன்னும் 2 நாள் தான் இருக்கிறது. கோயம்புத்தூர், எனக்கு முக்கியமான இடம். அங்கே என் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். சுவாமி சச்சிதானந்தன் அவர்களின் ஊர். அவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள பெரிய குடும்பத்தில் பிறந்தவர். பழனி சித்தர் ஆசிர்வாததால் பிறந்தவர். இஞ்ஜினியரிங் படித்த அவர், தனது குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன், குடும்பத்தை வாழ்க்கையை விட்டு பழனி சாமிக்கு சிசியனாக மாறினார்.
பின்னர் இமயமலை சென்று சிவானந்த சாமியாரிடம் தீட்சை பெற்று சச்சிதானந்தன் என்று பெயர் பெற்றார். அதனைத் தொடர்ந்து இலங்கையில...