அரசியல் களத்தில் ரஜினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு – கமல்ஹாசன்
கமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” எனும் கட்சியை கடந்த மாதம் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் செல்ல சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். அடுத்த மாதம் திருச்சியில் அவர் மாநாடு ஒன்றையும் நடத்த உள்ளார்.
நடிகர் ரஜினி தற்போது தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். அடுத்த மாதம் (ஏப்ரல்) தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அவர் தனது புதிய கட்சியின் பெயரை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. தனது அரசியல் “ஆன்மிக அரசியல்” ஆக இருக்கும் என்று ரஜினி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அரசியலில் ரஜினியும் கமலும் இணைந்து செயல்படுவார்களா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். என்றாலும் அரசியலிலும் தங்கள் நாகரீகமான நட்பு தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரஜினியுடனான தனது நட்புக்கு அரசியல் “ஆப்...