அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ரஜினியின் முதல் ட்வீட்
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து வந்தார். கடைசி நாளான இன்று அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா என்று குழம்பிப் போயிருந்த பலரது கேள்விக்கும் இந்த ஆண்டின் கடைசி நாளான இன்று விடை கிடைத்திருக்கிறது.
மேலும் ரஜினியின் இந்த முடிவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், மோகன் பாபு உள்ளிட்ட பலரும் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ரஜினி அவரது டுவிட்டர் பக்கத்தில் என்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் ...