Friday, November 8
Shadow

Tag: #RajSuriya

விசிறி – விமர்சனம் (Rating 3.5/5)

விசிறி – விமர்சனம் (Rating 3.5/5)

Review, Top Highlights
சென்னையில் அம்மா, அப்பாவுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் ராம் சரவணா. இவர் அஜித்தின் தீவிர ரசிகர். அதுபோல், மதுரையில் வாழ்ந்து வருகிறார் மற்றொரு நாயகன் ராஜ் சூர்யா. இவர் விஜய்யின் தீவிர ரசிகர். இருவரும் அடிக்கடி பேஸ்புக்கில் சண்டைப்போட்டு வருகிறார்கள். இதை தன் நண்பர்களுடன் பகிர்கிறார் ராம் சரவணா. ஆனால் நண்பர்களோ, நாங்கள் எல்லாம் பேஸ்புக்கில் பெண்களை கரெக்ட் செய்கிறோம். நீ சண்டை போட்டுகிட்டு இருக்கிற என்று அவரை கிண்டல் செய்கிறார்கள். இதையடுத்து, தானும் ஒரு பெண்ணை காதலிப்பேன் என்ற சவால் விடுகிறார் ராம் சரவணா. ஒரு நாள் நாயகி ரெமோனா ஸ்டெபனி பார்த்து காதல் வயப்படுகிறார். முதலில் ராம் சரவணாவின் காதலை மறுக்கும் ரெமோனா பின்னர் காதலை ஏற்றுக் கொள்கிறார். ரெமோனா விஜய் ரசிகை என்பதால், தானும் விஜய் ரசிகர் என்று பொய் சொல்லி காதலித்து வருகிறார் ராம் சரவணா. இந்நிலையில், மதுரையில் இருந்து சென்னை...