வேலைக்காரன் வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா: ஒளிப்பதிவாளர் ராம்ஜி
தனது தரமான சிறந்த ஒளிப்பதிவின் மூலம் ஒட்டு மொத்த படக்குழுவையும் ஆச்சர்யப்படுத்தும் எந்த ஒரு ஒளிப்பதிவாளரும் தன்னுடைய துறையை மட்டுமே பெருமிதத்துடன் நினைவு கூர்வார். இதற்கு முற்றிலும் மாறாக, குழந்தை உள்ளத்தோடு ஒட்டு மொத்த குழுவின் உழைப்பையும் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.
இயக்குனர் ராஜாவின் திறமையான இயக்கத்தை பற்றி ராம்ஜி கூறும்போது, "சென்னை வெள்ளத்தின் போது வேலைக்காரன் படத்தின் ஒரு வரிக்கதையை எனக்கு சொன்னார் மோகன் ராஜா. அவர் சொன்ன அந்த கான்செப்ட் என்னை கவர்ந்தது, இந்த படம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரிடம் உறுதி அளித்தேன். வேலைக்காரன் வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா, வருங்கால தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான படம். மோகன் ராஜா மற்றும் அவரின் உதவி இயக்குனர்களின் ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். ஒவ்வொரு நாளும் ம...