வயிற்று பிழைப்புக்கு மெரீனா பீச்சில் கர்சீப் விற்கும் ரங்கம்மா பாட்டி
தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமாணவர் ரங்கம்மா பாட்டி பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அதாவது எம்.ஜி.ஆர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஏன் இன்றைய முன்னணி நடிகர்கள் அஜித் விஜய் இவர்களுடனும் நடித்தவர்.ஆனால் இன்று அவர் நிலைமை மிகவும் பரிதாபத்துக்கு உரியது 100, 200 என்று சம்பளம் வாங்கிய அவர் இன்று மெரினா பீச்சில் 5ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கும் கர்ச்சீப் விற்று வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கிறார்.
சமீப காலங்களில் ரங்கம்மா பாட்டி அதிகம் காணப்பட்டது வடிவேலுவுடன் காமெடிக்காட்சிகளில்.சென்னை வடபழனி குமரன்காலனியில் வசித்து வருகிறார். மூதாட்டியான இவரது காமெடி ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக ஒரு திரைப் படத்தில் வடிவேலுவை, ‘போற வழியிலேயே அப்படியே இந்த நாயை ‘சூ’ வென விரட்டிட்டு போ’, என்று இவர் பேசிய வசனம் பிரபலமானது. அன்று முதல் ‘சூ பாட்டி’ என்...