பெண்களுக்கு தேவையானதை பெண்கள் போராடினால் மட்டும் தான் பெற முடியும் – இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு
தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித் , பி.சி.ஸ்ரீராம் , சத்யராஜ் , ரேவதி , அதிதி மேனன் , ரோகினி, பாலாஜி சக்திவேல் , புஷ்கர் காயத்திரி , அம்பிகா , சச்சு , சரோஜா தேவி , ப்ரேம் , விவேக் பிரசன்னா , சுளில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது :-
பெண்களுக்காக பெண்களாலே உருவாக்கப்பட்ட சங்கம். நமக்காக நாம பேசுகிறோம்னு பார்க்கும் போது அதை நான் ரொம்ப சூப்பரா பார்கிறேன்.ஒதுக்குதல் சாதி, மதம்னு பல்வேறு பிரிவு இருப்பதை போல் பெண்கள் மீதான ஒதுக்குதல் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவமாக இயல்பா இன்று வரையில் நடந்து கொண்டு இருக்கிறது. பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் மாட்டிக்கொண்டு ஒதுக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி சில பெண்கள் ஒதுக்குதலை எதிர்க்கிறார்கள் அவர்களின் வெளிப்பாடாய் தான் இந்த சங்கத்தை நான் ப...
