
வைபவ் நடிக்கும் ‘ஆர் கே நகர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
வைபவ், சரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு அரண்மனை 2 ,ஈசன், மேயாத மான் போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்டை படத்தில் ஒரு காட்சிக்கு மட்டும் வந்து செல்வார். தற்போது இவரது நடிப்பில் ஆர்கேநகர் படம் வெளியாக உள்ளது.
சரவண ராஜன் இயக்கத்தில் ஏப்ரல் 12ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ஆர்.கே.நகர். இந்த திரைப்படத்தில் வைபவ், சம்பத் ராஜ், பிரேம்ஜி, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், சந்தான பாரதி, சன அல்தாப், ஸ்ரீகுமார் போன்ற பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர், இப்படத்திற்கு வெங்கட்பிரபுவின் தம்பியான பிரேம்ஜி இசையமைத்து உள்ளார். அதனால் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்....