நடிகர் ரியோ ராஜ் பிறந்த தினம்
ரியோ ராஜ் என்பவர் தொலைக்காட்சி நடிகர் மற்றும் நிகழ்பட புரவலர் ஆவார். சன் மியூசிக் தொலைக்காட்சி அலைவரிசையில் தொலைக்காட்சிப் புரவலராகவும், விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் சரவணன் மீனாட்சி என்ற நாடகத்தில் முன்னணி நாடக நடிகராகவும் உள்ளார்.
ரியோ ராஜ் பிறந்து வளர்ந்த இடம் - தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் ஆகும். அங்கே அவர் பள்ளி பருவம் மற்றும் கல்லூரி பருவத்தை முடித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர் சன்மியுசிக் அலைவரிசையில் தொலைக்காட்சிப் புரவலராக பணியாற்றுகின்றார். ஸ்ருதி ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சன் மியூசிக் தொலைக்காட்சி அலைவரிசையில் தொலைக்காட்சிப் புரவலராக மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றி, பல முக்கிய நிகழ்ச்சிகளான சுடசுட சென்னை, கல்லூரிக்காலம், காபி டீ ஏரியா போன்றவற்றை வெற்றிகரமாக்கியுள்ளார். நடிக்கும் வாய்ப்பானது விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் சரவணன் ...