Thursday, October 29
Shadow

Tag: Rip Chief minister Dr. J.Jayalalaitha

முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்.

முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்.

Latest News
முன்னாள் தென்னிந்திய திரைப்பட நடிகையும், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஜெயலலிதா, கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் - வேதவல்லி தம்பதியினரின் மகளாக பிப்ரவரி மாதம் 24ம் தேதி 1948ஆம் ஆண்டு பிறந்தார். ஜெயலலிதா இரண்டு வயதில் இருக்கும் போது அவரது தந்தை ஜெயராம் காலமானார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூரில் இருந்த பொழுது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் ஜெயலலிதாவிற்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பை கைவிட்டு நடிக...