திகில் படமாக உருவாகிறது ரிஷிதரன் – ஷகானா நடிக்கும் “ மாஸ்க்
மாதா எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் ஷோபா விஜயன் தயாரிக்கும் படம் “ மாஸ்க் “
கதாநாயகனாக ரிஷிதரன் அறிமுகமாகிறார். நாயகியாக ஷகானா நடிக்கிறார். மற்றும் வடிவுக்கரசி, பிளாக் பாண்டி, சென்றாயன், யோகி, முனிஸ் ராஜா, மனோபாலாம், ஷகிலா,கிங்காங், போண்டா மணி, வெங்கல்ராவ், ஜெயமணி, விஜய் கணேஷ், சுப்புராஜ், சத்யேந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - புதுகை மாரிசா. இவர் பூவம்பட்டி, நடுஇரவு போன்ற படங்களை இயக்கியவர்.
சென்றாயன், முனிஸ்ராஜா, பிலாக்பாண்டி, யோகி இந்த நாலுபேரும் நண்பர்கள். வேலைவெட்டி இல்லாமல், கிடைத்ததை சாப்பிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்கள். உழைக்காமல் பணக்காரனாவது தான் இவர்களது லட்சியம்.
அப்படி ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் இவர்களது வாழ்கையில் ஒருநாள் இரவு ஒரு உருவம் எதிரில் தோன்றி நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்க வேண்டும் என்றால். சுடுகாட்ட...
