50-வது ஆண்டில் மெட்ராஸ் முதலை வங்கி: ஊர்வன பாதுகாப்புக்காக 15,000 கி.மீ. விழிப்புணர்வு பயணம்
50-வது ஆண்டில் மெட்ராஸ் முதலை வங்கி: ஊர்வன பாதுகாப்புக்காக 15,000 கி.மீ. விழிப்புணர்வு பயணம்
22 மாநிலங்கள்... 120 நாட்கள்... ‘Save The Reptiles’ மூலம் நாடு முழுவதும் விழிப்புணர்வு
சென்னை: ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து கடந்த 49 ஆண்டுகளாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மெட்ராஸ் முதலை வங்கி, தற்போது 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, ஊர்வன பாதுகாப்பை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் மிகப்பெரிய விழிப்புணர்வு பயணத்தை தொடங்கியுள்ளது.
சென்னையை அடுத்த மகாபலிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் முதலை வங்கி, இந்தியாவில் ஊர்வன பாதுகாப்புக்காக நீண்ட காலமாக செயல்பட்டு வரும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலைகள் மட்டுமின்றி பல்வேறு வகையான ஊர்வன உயிரினங்களை பாதுகாப்பது, அவற்றின் வாழ்விடங்களை காப்பது மற்றும் பொது...
