ருபாய் நாயகன் கிஷோர் ரவிச்சந்திரனுடன் ஒரு சந்திப்பு
எல்லோருக்கும் தெரிந்தவர்களாலும் எல்லாம் தெரிந்தவர்களாலும் தேர்வு செய்யப் படுபவர்கள் என்றுமே தோற்பதில்லை. அப்படித்தான் ரூபாய் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக அறிமுகமான கிஷோர் ரவிச்சந்திரனும்.
பிரபுசாலமன் , எம்.அன்பழகன் என இரண்டு திறமையானவர்களின் கண்டுபிடிப்பு தான் கிஷோர் ரவிச்சந்திரன். ரூபாய் படம் பார்த்தவர்கள் அத்தனை பேருமே பாராட்டு மழை பொழிந்தது கிஷோரின் நடிப்பைப் பார்த்து தான்.. புதுமுகம் என்கிற எண்ணமே யாருக்குமே தோன்றாத மாதிரி யதார்த்தமான நடிப்பில் அசத்தி விட்டார்.
அவரை சந்தித்து சினிமா பிரவேசம் எப்படி என்று கேட்டோம்..
நான் சென்னையில் படித்து முடித்து விட்டு எம்.பி .ஏ படிப்பிற்காக லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தேன்..
இங்கிருந்து லாரி ஓட்டிக் கொண்டு தேனி சென்றேன்.. தேனி மக்கள் பாஷையை கற்றுக் கொண்டேன். திரும்பி வந்து எங்களது குடும்ப நண்பரான சாட்டை எம்.அன்பழகன் வீட்டுக்கு வந்திர...
