உச்சத்தை தொட்ட பிரபாஸின் “சாஹோ” 4 நாட்களில் 330 கோடி வசூல்!
இந்திய சினிமாவின் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து 330 கோடியை 4 நாட்களில் குவித்து சாதனை படைத்திருக்க்கிறது பிரபாஸின் “சாஹோ”.
பிரபாஸின் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமும், பிரபல்யமும் அவர் படங்களை தேர்ந்தெடுக்கும் விதமும் இந்த அளப்பரிய வெற்றிக்கு காரணியாகியுள்ளது. தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து பிரபாஸின் வெறித்தனமான ரசிகர்களால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.
பாகுபலி படங்கள் மூலம் ரசிகர்களை வியப்பின் உச்சிக்கு இட்டுச் சென்ற பிரபாஸ் சாஹோவிலும் அதைத் தொடர்ந்திருக்கிறார். இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் “சாஹோ” திரைப்படம் சாதனைகள் படைத்து வருகிறது. இதனை டோலிவுட் டார்லிங் பிரபாஸின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
ரிலீஸான முதல் நாளிலேயே 100 கோடியை கடந்து சாதனை படைத்த “சாஹோ” இரண்டாம் நாளில் உலகளவில் 205 கோடியை கடந்தது. வசூலில் புயலாய் பாய்ந்த “சாஹோ” இந்தியாவில் அவஞ்சர்ஸ் எண்ட்...