இந்திய மற்றும் உலக அளவில் சாதிக்கும் சாய்ராம் பொறியல் கல்லூரி மாணவர்கள்
பொறியியல் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அனைத்து வகையிலும் தொடர்ந்து ஊக்கமளிக்கப்படும் என்று சாய் ராம் கல்லூரி நிர்வாகத்தின் தலைமை செயல் அதிகாரி திரு சாய் பிரகாஷ் லியோ முத்து தெரிவித்திருக்கிறார்.
கோ கார்ட் விளையாட்டில் ஒரு பிரிவான லூஸ்கார்ட் குழு போட்டியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும், சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள் வடிவமைப்பு போட்டியில் பங்குகொண்ட மாணவர்களுக்கும், பாஜா என்றழைக்கப்படும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், ஃபார்முலா கிரீன் 2017 என்ற பெயரில் கோவையில்நடைபெற்ற போட்டியில் பங்குபெற்று பாராட்டைப் பெற்ற மாணவர்களுக்கும், மொபைல் ஆப்ஸ் மற்றும் ஆப்பிள் வேர்ல்ட் டெவலப்பர் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவருக்கும் தேவையான நிதி உதவியை வழங்கும் விழா இன்று சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
விழாவில் சாய்ராம் பொறியியல் கல்லூரியின...