Tuesday, December 3
Shadow

Tag: #saamysqure

தூத்துக்குடி துயரத்தால் `சாமி’- 2 ட்ரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு

தூத்துக்குடி துயரத்தால் `சாமி’- 2 ட்ரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு

Latest News, Top Highlights
ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அந்த மோஷன் வீடியோவின் முடிவில், படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதன்படி படத்தின் டிரைலர் வருகிற மே 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது டிரைலர் வெளியிட்டை மாற்றி இருப்பதாக தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் அறிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதால், இது கொண்டாடுவதற்கான நேரம் இல்லை என்றும் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதால், டிரைலர் வெளியீட்டி தள்ளி வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். விரைவில் சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...