சம்ஹாரம் – திரை விமர்சனம் (Rank 2/5)
சம்ஹாரம் - திகிலும் மர்மமும் கலந்த ஒரே இரவின் கதை!
பிரஜின் பத்மநாபன், ஷர்மிஷா, நியா வர்கீஸ், கணேஷ் சாவரட்டில், ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சம்ஹாரம்’. Vidhya Productions சார்பில் வேல் முருகன் தயாரித்துள்ள இப்படத்தை ராம் பிரபா எழுதி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் V.G. ஹரி கிருஷ்ணனும், ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரமும் படத்தின் தொழில்நுட்ப பலத்திற்கு உறுதுணையாக நிற்கின்றனர்.
குடும்ப கௌரவம், காதல், பழிவாங்குதல் மற்றும் மர்மம் ஆகியவற்றை ஒரே கதைக்களத்தில் இணைத்து த்ரில்லர் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறது சம்ஹாரம். தங்கையின் காதலை ஏற்க மறுக்கும் அண்ணனாக பிரஜின் தோன்றுகிறார். கட்டாயத் திருமண ஏற்பாடுகள் தீவிரமடையும் சூழலில், காதலனுடன் தப்பிச் செல்லத் திட்டமிடும் தங்கை, அந்த இரவில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களால் சிக்கிக் கொள்கிறாள...
