சண்டக்கோழி-2 ரிலீஸ் தேதியை அறிவித்தார் விஷால்
விஷால் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் `இரும்புத்திரை'. இந்த படத்தை தொடர்ந்து விஷால் தற்போது `சண்டக்கோழி-2' படத்தில் நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
விஷாலின் 25-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரபேற்பை பெற்றுள்ளது. இந...

