Tuesday, June 6
Shadow

Tag: #sandaikozhi2 #vishal #lingusamy #keerthisuresh #rajkiran #yuvanshankarraja

சண்டகோழி 2 – திரைவிமர்சனம் (மிரட்டல்) Rank 3.5/5

சண்டகோழி 2 – திரைவிமர்சனம் (மிரட்டல்) Rank 3.5/5

Review, Top Highlights
சண்டைகோழி படம் விஷால் லிங்குசாமி கூட்டணியில் வந்த மிக பெரிய வெற்றி படம் இந்த கூட்டணி மீண்டும் இணையவில்லை சுமார் பதினைந்து வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இருகிறார்கள் அதுவும் சண்டைகோழி இரண்டாம் பாகம் என்று முதல் பாகம் இயக்குனர் லிங்குசாமிக்கு மட்டும் இல்லை நாயகன் விஷாலுக்கும் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்தை கொடுத்த படம் என்பதால் இந்த படத்துக்கு மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு உள்ள படம் விஷாலுக்கு தொடர் வெற்றிகள் இயக்குனர் லிங்குசாமிக்கு வெற்றி அவசியம் என்ற நிர்பந்தத்தில் வந்துள்ள படம் தான் இந்த படம் இந்த சண்டைகோழி2 இரண்டாம் பாகம் முதல் படம் போல பல மடங்கு இருக்கும் என்று விஷாலும் இயக்குனர் சொல்லி இருகிறார்கள் இதனால் இந்த படத்துக்கு மேலும் எதிர்பார்ப்புகள் சரி படத்தை பார்ப்போம் படத்தின் கதாநாயகனாக வரும் பாலு (விஷால்) மற்றும் அவரது தந்தை அய்யா (ராஜ்கிரண்) ஆகியோா் ஊரின்...
அநீதிகள் நடப்பதற்கு முன்பே புகார் கொடுத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் – விஷால்

அநீதிகள் நடப்பதற்கு முன்பே புகார் கொடுத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் – விஷால்

Latest News, Top Highlights
இவ்வளவு மிகப்பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்படம் முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பார். அடுத்து கீர்த்தி சுரேஷ். சண்டக்கோழி 2 வில் அவருடைய கதாபாத்திரம் அவ்வளவு அழகானது. கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான். சண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இரும்புத்திரைக்கு சிறப்பான இசையை தந்து படத்துக்கு வலு சேர்த்த யுவன் ஷங்கர் ராஜா, சண்டக்கோழி 2 வுக்கும் சிறப்பான இசையை தந்துள்ளார். சண்டக்கோழி 2 திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படமாக இருக்கும். வெளியீட்டு தேதியை சொல்லிவிட்டு ஒரு படமெடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம். படக்குழுவுக்கு அது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இனிமேல் அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். யுவன் ஷங்கர் என்னுடைய ...
சண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்

சண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்

Latest News, Top Highlights
சண்டக்கோழி2 திரைப்படத்தில் வேலைப்பார்க்கும் போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். சண்டக்கோழி2-வில் நான் கம்போர்ட் சோணிலிருந்து வெளியேவந்து நான் நடித்துள்ளேன். நாங்கள் திண்டுக்கல் , காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அங்கே நிறைய தொடர்ச்சியாக நிறைய அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே தான் எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும். படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடலில் டேன் ஏற்பட்டது. இப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது என்றார் வரலட்சுமி. விஷால் நடித்து தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 வருகிற அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத...
பொறி கிளப்பும் சண்டக்கோழி 2 ட்ரைலர் லிங்குசாமியின் மொத்த வித்தையும் தெறிக்குது

பொறி கிளப்பும் சண்டக்கோழி 2 ட்ரைலர் லிங்குசாமியின் மொத்த வித்தையும் தெறிக்குது

Latest News, Top Highlights
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சண்டக்கோழி 2. இந்த படத்தில் வரலட்சுமி வில்லியாக நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் 2வது ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லரில் ராஜ் கிரண் கெத்து காட்டுகிறார். மனிதருக்கு வயதே ஆகாது போல. கீர்த்தி சுரேஷ் வழக்கம் போன்று வந்து ஹீரோவை காதலிக்கிறார், வம்பிழுக்கிறார். உன்னை கட்டிக்கிறேன், அவரை வச்சிக்கிறேன் என்கிறார் கீர்த்தி. தப்பில்ல தப்பில்ல. ஆம்பளங்க வீசினால் தான் அருவாள் வீசும்னு நினைச்சியா பொம்பளங்க வீசினாலும் வீசும் என்று மாஸ் காட்டியுள்ளார் வரலட்சுமி. விஷால் ஒரு பக்கம் தெறிக்க விடுகிறார். திருவிழாவில் புலி வேஷம் போடலாம் ஆனால் புலிக்கு முன்னாடியே வேஷம் போடக் கூடாது என்று விஷாஸ் பன்ச் விடுகிறார். ட்ரைலரிலே இப்படி மாஸ் காட்டும் எல்லோரும் படம் எப்படி இருக்கும் விஷால் பே...
சண்டை கோழி  கதை என்னை டென்ஷன் செய்தது

சண்டை கோழி கதை என்னை டென்ஷன் செய்தது

Latest News, Top Highlights
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சண்டக்கோழி 2’. விஷால் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்க, கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கீர்த்தி சுரேஷ், “லிங்குசாமி சாருக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கதையைக் கேட்கும்போது ரொம்ப டென்ஷனாக இருந்தேன். மீரா ஜாஸ்மின் மேடம் பற்றி எல்லாருக்கும் தெரியும், ‘சண்டக்கோழி’ முதல் பாகத்தில் எப்படி நடித்திருப்பார் என்று. அதை எப்படி நான் பண்ணப் போகிறேன் என்ற பயம் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தைக் கேட்டபின், அதற்கு நிகராகவாவது நடிக்க வேண்டும் என தோன்றியது. ‘மகாநடி’ படப்பிடிப்பின்போதும் இந்தப் படம்தான் எனக்குப் பெரிய ரிலாக்ஸாக இருந்தது. ‘மகாநடி’க்குப் பின் நான் விரும்பி நடித்த படம் ‘சண்டக்கோழி 2’. ...
சண்டக்கோழி 2 திரைப்படம் புகழ்பெற்ற காட்பாதரை போல் வந்துள்ளது என்பது பெருமையான விஷயம் – விஷால்

சண்டக்கோழி 2 திரைப்படம் புகழ்பெற்ற காட்பாதரை போல் வந்துள்ளது என்பது பெருமையான விஷயம் – விஷால்

Latest News, Top Highlights
விஷால் நடித்து தயாரித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் விஷால் , கீர்த்தி சுரேஷ் , இயக்குநர் லிங்குசாமி , நடிகர் ராஜ்கிரண் , ஒளிப்பதிவாளர் சக்தி , எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். விஷால் பேசியது :- 25படங்களில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சண்டக்கோழி பாகம் ஒன்னு எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல.அது விஜய் மற்றும் சூர்யாவுக்காக எழுதப்பட்டது.கதை பற்றி கேள்வி பட்டதும் லிங்குசாமி எனக்கு இருபது வருட நண்பர் அந்த உரிமையில் அந்த படத்தை நான் நடிக்கின்றேன் என்று கூறினேன் அப்போது செல்லமே படம் வெளிவரவில்லை. சண்டக்கோழியில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக நிறுத்திவிட்டார்.அங்க தொடங்கியதுதான் என் வாழ்கை.கனல் கண்ணன் மாஸ்டர் அந்த படத்தில் கொடுத்த தைரியம் ஆக்ஷன் ஹீரோவாக என்னை வெளிப்படுத்தியது.தாவணி போட்ட ...
‘சண்டைக்கோழி-2’ படத்தின் ‘கம்பத்து பொண்ணு’ பாடலின் டீஸர்

‘சண்டைக்கோழி-2’ படத்தின் ‘கம்பத்து பொண்ணு’ பாடலின் டீஸர்

Latest News, Top Highlights
விஷால் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி-2' படத்தில் நடித்து வருகிறார். ⭐விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் 'கம்பத்து பொண்ணு' பாடலின் டீஸர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது ...
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது !

சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது !

Latest News, Top Highlights
விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டக்கோழி. இன்றும் திரைப்பட விரும்பிகளின் மிகவும் பிடித்தமான படம் என்று சொன்னால் இப்படத்தை கண்டிப்பாக சொல்வார்கள். வெளிவந்து பல வருடம் ஆன பின்னரும் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக சண்டக்கோழி உள்ளது. பிளாக்பஸ்டர் சண்டக்கோழியின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் விஷால் , இயக்குனர் லிங்குசாமி மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்ற வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த வருடம் வெளியாக உள்ள திரைப்படங்களில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக இது உள்ளது. சண்டக்கோழி 2 டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று யுவன் இசையில் சண்டக்கோழி 2 முதல் சிங்கிள் வெளியாகவுள்ளது....
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !

சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !

Latest News, Top Highlights
விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நீளமான வசனம் , நடிக்க மிகச்சிறந்த வாய்ப்பு என்று கீர்த்தி சுரேஷுக்கு இப்படம் அவருடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறுகிறது படக்குழு. பல்வேறு லொகேஷன் , இரவு , பகல் பாராது விடாமல் உழைக்கும் இயக்குனர் , நடிகர்கள் , படக்குழு என்று சண்டக்கோழி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவுபெற்றது. எப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி , செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் கீர்த்தி சுரேஷ் செய்த செயல் படக்குழுவினர் 150 பேரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆம் , நாயகி கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார். தன்னுடைய படக்குழுவை மிகவும் நேச...