கொடைக்கானலில் விஷால் – கீர்த்தி சுரேஷ் காதல்
விஷால் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் நடித்து வருகிறார்.
இதில் `சண்டக்கோழி-2' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிக்கிறார். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், சண்டக்கோழி 2 படத்தின் பாடல் காட்சிக்காக விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் படக்குழுவினருடன் கொடைக்கானலுக்குச் சென்றுள்ளனர். இப்படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாவது பாதி திண்டுக்கலில் தொடங்குகிறது.
அங்கு படத்தின் பாடல் காட்சிகளை படமாக்கவும், விஷால் - கீர்த்தி சுர...