“சண்டி முனி”படத்திற்காக முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ்.
சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் D.சிவராம் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் சண்டிமுனி. நட்ராஜ் கதா நாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மற்றும் வாசுவிக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, குண்டு ரவி, முத்துக்களை, கெளரி புனிதன், கோவை ஈஸ்வரி, விசித்திரன், காதல் சுகுமார், சூப்பர் சுப்பராயன்,ஷபிபாபு, விஜய்பூபதி, நரேஷ் ஈஸ்வர் சந்துரு, லொள்ளு சபா பழனி,மேட்டூர் சேகர் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா செல்வகுமார்.
இந்த படத்திற்காக சென்னை வளசரவாக்கம் பகுதியில் முனீஸ்வரன் கோயில் அரங்கும் சிலையும் அமைக்கப் பட்டது ...முப்பது அடி உயர சிலை அமைக்கப் பட்டு அதன் முன் மனீஷா யாதவ் பக்தி ரசம் சொட்ட
"பெரும் கோபக்காரா
எங்க சண்டி வீரா
தொல்லை தீர்க்க வாடா
ஆவி ஓட்ட வாடா" என்று பாட்டு பாடி ஆடி...