“திருட்டு விசிடி பார்க்க கூடாது” ; தாயிடம் சத்தியம் வாங்கிய ‘சங்கு சக்கரம்’ சிறுவன்..!
குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக வெளியாகும் படங்களில் நகைச்சுவை படங்களுக்கு இணையாக ஹாரர் படங்களுக்கும் பங்கு உண்டு. அந்தவகையில் இந்தமுறை குழந்தைகளே பேயை மிரட்டும் புதுமையான விதமாக வரும் டிச-29ஆம் தேதி வெளியாக உள்ள படம் தான் மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சங்கு சக்கரம்'.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் சமீபத்தில் வெளியான ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பட இயக்குனர் அப்பாஸ் அக்பர் கலந்துகொண்டு பேசியபோது, எங்களது ஆறு வருட உழைப்பை ஒரேநாளில் திருட்டு விசிடிகளும் ஆன்லைன் இணையதளங்கள் சிலவும் களவாடி விடுகின்றனர் என கூறி அதற்குமேல் பேசமுடியாமல் கண்ணீர்விட்டபடி அந்த விழா அரங்கை விட்டே வெளியேறினார்.
அவரது கண்ணீரும் அவரது பேச்சும் விழாவில் கலந்துகொண்ட, ‘சங்கு சக்கரம்’ படத்தில் குட்டீஸ்களில் நடித்துள்ள ஒரு சிறுவனின் மனதை ரொம்பவே பாதித்து விட்டது. அன்றைய தினம் இரவு மௌனமாக ...