முதல்முறையாக நடிகையை பார்த்து பயந்தேன் – ஆர்யா
ஆர்யா - சாயிஷா நடிக்கும் படம் ‘கஜினிகாந்த்’. சந்தோஷ் பி.விஜயக்குமார் இயக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இந்த படத்துக்கு பாலு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் சிங்கிள் டிராக் வெளியிடும் விழா சென்னையில் நடந்தது. இதில் கஜினிகாந்த் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதில் ஆர்யா பேசும் போது,
“சாயிஷா ‘வனமகன்’ படத்தில் நன்றாக நடித்திருந்தார். அதே சமயம் அதிரடியாக நடனம் ஆடி இருந்தார். எனவே, ‘கஜினிகாந்த்’ படத்தில் அவருடன் பாடலுக்கு நடனம் ஆட பயந்து கொண்டிருந்தேன். நானும், சாயிஷாவும் நடனம் ஆடிய பாடல் காட்சி பாங்காங்கில் படமாக்கப்பட்டது. ஒரு வழியாக கஷ்டப்பட்டு ஆடினேன்.
பின்னர் சென்னை வந்து பாடலை எடிட்டிங் செய்தபோது, சாயிஷா பயங்கரமாக நடனம் ஆடி இருக்கிறார். நீங்கள் பக்கத்தில் சும்மா நிற்கிறீர்கள் என்று சொன்னா...