
ஆர்யா அடுத்தாக ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் `கஜினிகாந்த்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் இந்த படத்தில் ஆர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பாலமுரளி பாலு இசையமைக்கிறார். பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆர்யா மற்றும் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டரை நடிகை திரிஷாவும், ஹன்சிகாவும் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இந்த போஸ்டரில் ஆர்யாவும், படத்தின் நாயகி சாயிஷாவும் இணைந்து காதல் செய்வது போன்ற போஸ்டரை அவர்கள் வெளியிட்டனர்.

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
