தயாரிப்பாளர் அசிங்கமாக திட்டிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சர்ச்சையில் சிக்கல்
இந்திய திரையுலகின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளராக திகழ்பவர் சந்தோஷ் சிவன். இவரின் ஒளிப்பதிவில் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் அடுத்ததாக ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில், ஒரு நாயின் புகைப்படங்களை பதிவிட்டு தயாரிப்பாளர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு புகைப்படத்தில், நாய் கோபமாக குரைப்பது போலவும், அதே நாய் மற்றொரு புகைப்படத்தில் புன்னகை ததும்பும் முகத்துடன் அமைதியாக இருப்பது போலவும் உள்ளது.
அதில், கோபமாக குரைக்கும் நாயின் புகைப்படத்திற்கு மேலே, " தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்கும் போது" என்றும், அமைதியாக புன்னகையோடு இருக்கும் நாயின் புகைப்படத்திற்கு மேலே " தயாரிப்பாளர் கதாநாயகிகளுக்கு சம்பளம் கொடுக்கும் போது" என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
பொதுவாக தயாரிப்பாளர்கள் கதாநாயகிகளுக்கு சம்பளம் கொடுக்க தயங்குவதில்லை. ஆனால் தொழில்நுட்பக் கலைஞர்களுக்க...
