மீண்டும் சினிமாவில் சரத்குமாரின் ‘ரெண்டாவது ஆட்டம்’
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களில் பெயர் போனவர் நடிகர் சரத்குமார். திரையுலகிற்கு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும், நாளுக்கு நாள் அவரது உடலழகு மெருகேறி கொண்டே போகின்றது. இன்றைய தலைமுறை கதாநாயகர்களுக்கும் அவர் போட்டியாக இருப்பதற்கு அவரின் கட்டுக்கோப்பான உடலமைப்பும் ஒரு மிக முக்கிய காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். சவாலான கதைக்களங்கள் மீது பேரார்வம் கொள்வது மட்டுமில்லாமல் தன்னை அந்த படத்திற்காக முழுவதுமாக அர்ப்பணித்து கொள்வது தான் சரத்குமாரின் சிறப்பம்சம் என்று திரை உலக வர்த்தகர் பலர் கூறுகின்றனர். சரத்குமார் தற்போது நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு 'ரெண்டாவது ஆட்டம்'. இந்த படத்தின் வேலைகள் வருகின்ற ஜூன் மாதம் முதல் துவங்க இருக்கின்றது.
"என்னுடைய சிறு வயது முதல் நான் ஹோலிவுட் நடிகர் அல் பசினோவின் படங்களை பார்த்து தான் வளர்ந்து இருக்கின்றேன். அவருடைய படங்கள் அனைத்தும் ...
