உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’
V .R .மூவிஸ் சார்பாக்க T.ராஜேஸ்வரி தயாரிப்பில் உருவாகிவரும் படம் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'.. S.T..வேந்தன் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் ஷாம்-சினேகா நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்த புதிய படத்தில் சரத்குமார் என்கவுன்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.. கதாநாயகியாக மனித உரிமை கழக அதிகாரியாக இனியா நடிக்கிறார். மற்றும் இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பை கவனிக்கிறார். இளம் ஜோடிகளாக அர்வி, கேரள வரவு நீரஜா நடிக்கின்றனர்.
இன்றைய தேதியில் வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களால் பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கலாச்சார சீர்குலைவும் ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் காவல்துறை அதி...