சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது தேசதுரோக வழக்கு
கடந்த சில ஆண்டுகளாக விஜய் நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் அனைத்தும் கடந்த பல ஆண்டுகளாகவே சர்ச்சையில் சிக்கி வருகின்றன. அந்தவகையில் தற்போது தீபவாளிக்கு வெளியாகி இருக்கும் சர்கார் படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
சர்கார் படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரை, வரலட்சுமி கேரக்டருக்கு வைத்து தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பது, அரசின் இலவச திட்டங்களை விமர்சித்திருப்பதற்கு ஆளும் அதிமுக., அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமைச்சர்கள் ஒவ்வொருவராக படத்தை எதிர்த்து வருகின்றனர். விஜய், முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முருகதாஸ் மீது தேச துரோக சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தேவராஜன் என்பவர் புகார் அளித்திருக்கிறார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது ...