விஜயின் சர்கார் படத்துக்கு அதரவாக குரல் கொடுக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்
இந்தியா முழுக்க மெர்சலை தொடர்ந்து சர்கார் படம் பெரிய வைரல் ஆகியுள்ளது. முன்பு பாஜகவால் மெர்சல் வைரல் ஆனது. தற்போது அதிமுகவினரின் போராட்டம் காரணமாக இந்தியா முழுக்க தற்போது சர்கார் படம் வைரல் ஆகியுள்ளது.
தீபாவளியன்று விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியானது. இந்த படத்தில் நிறைய அரசியல் தொடர்பான காட்சிகள் உள்ளது. இதனால் இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சர்காருக்கு ஆதரவு தெரிவித்து இயக்குனர் பா.ரஞ்சித் டிவிட் செய்துள்ளார்.
அதில் ''#சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ "ஜனநாயகம்" அழிந்து/இழந்து போய்விட்டது என்று!!!'' என்று கூறியுள்ளார். அதேபோல கமல் இந்த படத்துக்கு அதரவாக ட்விட் செய்து இருந்தார் அதையும் இவர் ரீ ட்விட் செய்துள்ளார்....