
சர்கார் சர்ச்சைக்குரிய காட்சிகள் ரத்து இன்று முதல்
இன்று தமிழகத்தின் முக்கிய பிரச்னை என்றால் அது சர்கார் படம் தான் காரணம் ஆளும் கட்சியை பற்றிய சர்ச்சைக்குரிய காட்சிகள் தான் இதனால் தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஆதிமுகவினர்கள் கிளப்பினர் இதனால் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் இன்று முதல் நீக்கபடுகிறது.
சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக மேற்குமண்டல திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர், 'திருப்பூர்' சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவினர் போராட்டத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சுப்பிரமணியன் கூறியதாவது: அதிமுகவினர் மாநிலம் முழுக்க, சர்கார் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து, தயாரிப்பு தரப்பு கவனத்திற்கு கொண்டு சென்றோம். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இன்று இரவு, எந்தெந...