சத்ரியன் “படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது = இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
இன்றைய தமிழ் சினிமா சூழலில் ஒரு படத்துக்கு சென்சாரில் யு சர்டிஃபிகேட் அதாவது அனைவரும் தாராளமாக குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்ற சன்றிதழ் கிடைப்பதே படத்தின் பாதி வெற்றியை நிர்ணயித்துவருகிறது. சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் என்று வரிசையாக என் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று பிடிவாதமாக படம் இயக்கி வரும் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி அடுத்து வரவிருக்கும் சத்ரியன் படத்துக்கும் யு சான்றிதழ் வழங்கி இருக்கிறது சென்சார் போர்டு.
இதுபற்றி எஸ்.ஆர்.பிரபாகரன் கூறும்போது ‘இன்றைய சூழலில் ரசிகர்கள் குடும்பத்துடன் பார்க்கும் படங்கள் தான் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் தரும் என்ற நிலை இருக்கிறது. இயல்பாகவே நான் உறவினர்களோடு சினிமா பார்க்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் ஒரு குடும்பம் படத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கும் என்பது தெளிவாகத் தெரியும். அதனால் தான் என்னுடைய முந்தைய இரண்...
