சர்ச்சையை கிளப்புமா சத்திரியன் டைட்டில்
சத்ரியர் என்ற சாதியே இந்தியாவில் இல்லை. சூத்திரர் என்ற சாதியில் எவர் மண்ணை வெல்ல முடிகிறதோ அவர்களே ஆட்சியாளர்களாக ஆனார்கள். மகாபாரதத்தின் சத்ரிய வம்சம் பெரும்பாலும் சூத்ரசாதியிடமிருந்தே உதயமாகிறது. தன்னை சத்ரியனல்ல என்று சொல்லி அவமதிக்கும் சிசுபாலனைக் கொல்வதற்குமுன் கிருஷ்ணன் அதைச் சொல்கிறான், மண்ணாள்பவனே சத்ரியன் என்று. வர்ணப் பிரிவினையின் அடிப்படையில் நூல்களில் இவர்களுக்கான தொழில்கள் ஒதுக்கப்பட்டன.
ஆனால் இதுவும் கொள்கையடிப்படையில்தான், நடைமுறையில் அல்ல. உதாரணமாக இந்தியவரலாற்றில் ஒருதருணத்திலும் பிராமணச் சாதியினர் பிராமணர்களுக்கு என வர்ணாசிரமம் ஒதுக்கிய பணிகளை மட்டும் செய்ததில்லை. மகாபாரத காலம் முதலே அவர்கள் போர்செய்திருக்கிறார்கள்.நாடாண்டிருக்கிறார்கள். மிகச்சமீபகாலத்தில் நாயக்கர் ஆட்சியின்போதுகூட நியோகிபிராமணர்களே போர்த்தளபதிகளாக இருந்திருக்கிறார்கள்.ஆக இந்த வர்ணாசிரமப் பிரிவினையும்...
