நாய் சேகர் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)
தமிழ் சினிமாவில் நல்ல நகைச்சுவை நடிகராக வலம் வரும் சதீஸ் நாயனாக அறிமுகமாகியிருக்கும் சினிமா நாய் சேகர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த சினிமா பொங்கலுக்கு திரைக்கு வந்திருக்கிறது.
அறிமுக இயக்குர் கிஷோர் ராஜ்குமார் இயக்கியிருக்கும் இந்த சினிமாவில் சதீஸ் நாயகனாகவும் பவித்ர லட்சுமி நாயகியாகவும் நடித்துள்ளனர். ஜார்ஜ் மரியம், ஸ்ரீமன், லிவிங்ஸ்டன், இளவரசு, மனோ பாலா, கு. ஞானசம்பந்தன் உள்ளிட்டோரும் இக்கதைக்கு தங்களது நடிப்பின் மூலம் வலு சேர்த்துள்ளனர். இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இப்படத்தில் நடிகராக திரையில் தோன்றி பாடல்கள் பாடி அசத்துகிறார். இசையமைப்பாளர் சங்கர் கணேஷை ஜாலியான வில்லனாக காட்டியிருப்பது வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.
ஜார்ஜ் மரியத்தின் ஆராய்சியில் நடந்த குளறுபடியினால் நாய் மனிதனாகவும் மனிதன் நாயாகவும் மாறிவிடுகிறார்கள். அதன் பிறகு நடக்கும் கலகல கலாட்டாக்களின் ஜாலியான திரைத்தொகு...