
‘பார்ட்டி’யில் பிரச்சனை பண்ணும் ஷாம்!
அழகு ஹீரோ , ”தென்னிந்தியாவின் சல்மான்கான்” என நடிகர் சத்யராஜால் புகழாரம் சூட்டப்பட்டவர்.
கமல், விக்ரமிற்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க அதிகமாக மெனக்கிட்டவர், ரிஸ்க் எடுத்தவர். ’6 மெழுகுவர்த்திகள்’ படத்தில் மெலிந்தார். கண்களை வீங்கச் செய்தார். தனது மெனக்கிடலை அற்புதமான நடிப்பால் படத்தை மெருகேற்றியவர். ’புறம்போக்கு’ படத்தில் மெக்காலேவாக அசத்தியவர். ஆனால் எந்த விருதுகளாலும் கண்டுகொள்ளப்படவில்லை இதுவரை.
இப்படி புறக்கணிக்கப்பட்டதாக நீங்கள் வருத்தப்பட்டதில்லையா? என்றால் மெல்ல சிரிக்கிறார். இல்லை. வருத்தம் விருது கிடைக்காததில் இல்லை. ஒரு தோல்வியில் இருக்கும் நடிகன் நல்ல படம் கொடுக்க முடியாது என்ற மக்களின் நம்பிக்கைதான் வருத்தமளித்தது. 6 படத்தில் அதிக உழைப்பை போட்டேன். ஷாமால் இதுவும் செய்ய முடியும் என நிருபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக்கொண்டேன்.
மக்கள் தங்கள் பிள்ளைகளை ...