தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவிருக்கும் Dr. ராஜசேகர் – ஜீவிதாவின் மகள் ஷிவானி !
இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு “ இது தாண்டா போலீஸ் “ போன்ற பல வெற்றி படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்த நடிகர் Dr. ராஜ சேகர் மற்றும் “ கடமை கண்ணியம் கட்டுப்பாடு “ போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையான ஜீவிதாவின் மகள் ஷிவானி ராஜசேகர் ஆவார் . ஷிவானி தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.
அப்பாவும் , அம்மாவும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும் , நடிப்பு பற்றியும் சின்ன வயதில் இருந்தே அறிமுகம் இருந்திருக்கு. சின்ன வயதில் இருந்தே பரதநாட்டியம் , குச்சிபிடி போன்ற நடன வகுப்புகளுக்கு சென்று வருகிறேன். இசையிலும் எனக்கு ஆர்வம் உண்டு. கீ போர்ட் , கிடார் , வீணை ஆகியவற்றை நன்றாக வாசிப்பேன். நானும் தங்கை ஷிவாத்மிகாவும் யூடியுப் பார்த்து பாடி கொண்டே இருப்போம் இது எங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. நானும் தங்கையும் கிக் பாக்சிங் பட...
