நடிகை ஷோபா மறைந்த தின பதிவு
ஷோபா தென்னிந்தியத் திரைப்பட நடிகை. தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான இவர் உத்ராத ராத்திரி என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தனது 17வது வயதில் பசி தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
சோபா கே. பி. மேனன் என்பவருக்கும், பிரேமா மேனன் என்பவருக்கும் பிறந்தார். தாயார் 1950களில் மலையாளப் படங்களில் பிரபலமான நடிகையாக விளங்கியவர். சோபா 1966 ஆம் ஆண்டில் சந்திரபாபுவின் இயக்கத்தில் வெளியான தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் பேபி மகாலட்சுமி என்ற பெயரில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். 1967 இல் பி. வேணுவின் இயக்கத்தில் உத்யோகாஸ்தா என்ற மலையாளத் திரைப்படத்தில் பேபி ஷோபா என்ற பெயரில் நடித்தார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்று சோபாவிற்கு...
